இஸ்லாமியர்களின் புனித நகரமான மெக்காவில், மிக உயரமான ஓட்டல் ஒன்று கட்டப்பட்டுள்ளது. புர்ஜ் துபாய் கட்டடத்தை விட, உயரத்தில் இந்த ஓட்டல் 36 அடி மட்டுமே குறைவு. எனினும், இந்த ஓட்டலின் உச்சியில் வைக்கப்பட இருக்கும் கடிகாரம், உலகின் மிகப் பெரிய கடிகாரம் என்ற பெருமையைப் பெற உள்ளது."மெக்கா கிளாக் டவர் ராயல் ஓட்டல்' என பெயரிடப்பட்டுள்ள இந்த ஓட்டலைச் சுற்றி, ஏழு உயரமான கட்டடங்கள் உள்ளன. லண்டன் பிக்பென் கடிகாரத்தை விட 4.7 மடங்கு பெரிய கடிகாரம், இந்த கட்டடத்தின் உச்சியில் வைக் கப்பட உள்ளது. இந்த ஓட்டலின் மொத்த உயரம் 1591 அடி. மொத்தம் 13 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவில் இந்த ஓட்டல் கட்டப் பட்டுள்ளது. புனித நகரமான மெக்காவில் மிகவும் ஆடம்பர, அதிக கட்டணம் கொண்ட ஓட்டல் இதுதான். இந்த ஓட்டலில், 1005 அறைகள் உள்ளன. அதில் தங்கி இருப்பவர்கள் பயணிக்க, 76 லிப்ட்கள் உள்ளன. இந்த ஓட்டலின் இன்னொரு பகுதியில், இரண்டு ராயல் ஓட்டல்கள், ஐந்து கோல்டன் ஓட்டல்கள் உருவாக உள்ளன. ஜெர்மனியில் தயாரான இந்த கடிகாரம் 147 அடி அகலம், 141 அடி உயரம் கொண்டது. கட்டடத்தின் நான்கு பக்கங்களிலும், இந்த கடிகாரம் இருக்கும்.
(புகைப்படங்களை பெரிதாக காண அதனை கிளிக் செய்யவும்)
தகவல்: சகோதரர் வஜீர் அலி அஹமத், நீடூர்.
நீங்க மட்டும் படிச்சா போதுமா? மத்தவங்களுக்கும் சொல்லுங்க!









No comments:
Post a Comment