31 December 2010

வட்டி இல்லா கடன் உதவி திட்டம்

  இஸ்லாத்தினை அதன் தூய வடிவில்  [அல்லாஹ் வழங்கிய அல்குரான் மற்றும் அண்ணல் நபிகள் நாயகம் (ஸல் ) அவர்களின் வழிகாட்டுதல் (ஹதிஸ் ) அடிப்படையில்] அறிந்து நடைமுறைபடுத்திவரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உடுமலை கிளை சார்பாக   
வட்டி இல்லா கடன் உதவி திட்டம் உருவாக்கி நடைமுறைபடுத்தி வருகிறோம். அல்ஹம்துலில்லாஹ்!

வட்டி

       'வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். 'வியாபாரம் வட்டியைப் போன்றதே' என்று அவர்கள் கூறியதே காரணம்.அல்லாஹ் வட்டி யைதடை செய்து விட்டான்.தமது இறைவனிடமிருந்து தமக்கு அறிவுரை வந்த பின் விலகிக் கொள்பவருக்கு முன் சென்றது உரியது .அவரைப்பற்றிய அறிவு அல்லாஹுவிடம் உள்ளது,மீண்டும் செய்வோர் நரக வாசிகள் ,அதில் நிரந்தரமாக  இருப்பார்கள். (அல்குர்ஆன் 2:275)   
   
'நம்பிக்கை  கொண்டோரே! பன்மடங்காக பெருகிக் கொண்டிருக்கும்  நிலையில் வட்டி (வாங்கித்) தின்னாதீர்கள்.அல்லாஹுவை அஞ்சுங்கள்.இதனால் வெற்றி பெறுவீர்கள்.  (அல்குர்ஆன் 3:130)

ஏழு பெரும் பாவங்களை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் சொன்ன போது, 'சொல்லுங்கள் அல்லாஹ்வின் தூதரே!' என்று அவர்களது தோழர்கள் கூறினார்கள். அப்போது,
1.அல்லாஹ்வுக்கு இணை வைப்பது.
2.சூனியம்.
3.கொலை
4.வட்டி உண்பது
5.அனாதைகளின் சொத்தை உண்பது
6.போரில் புறமுதுகு காட்டுவது
7.அபலைப் பெண் மீது அவதூறு சொல்வது
என்று என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
    அல்லாஹுவின் சாபதிற்குஉரியோர் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வட்டியை வாங்கி உண்ணுபவன், அதனை உண்ணச் செய்பவன், அதற்கு சாட்சி கூறும் இருவர் ஆகியோரை நபி(ஸல்) அவர்கள் சபித்தார்கள். இன்னும் அவர்கள்  அனைவரும் (குற்றத்தில்) சமமானவர்கள் என்றார்கள்.
 நூல்: முஸ்லிம் 3258

 வட்டி வாங்கியோருக்கு தண்டனை
  நிரந்தர நரகம்: 
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இன்றிரவு (கனவில்) இரண்டு மனிதர்களைக் கண்டேன். அவர்கள் என்னிடம் வந்து தூய்மையான ஒரு நிலப்பகுதிக்கு என்னை அழைத்துச் சென்றனர். நாங்கள் நடந்து வந்தபோது இரத்த ஆறு ஒன்றை அடைந்தோம். ஆற்றில் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். ஆற்றின் நடுவில் மற்றொருவர் தமக்கு முன்னே கற்களை வைத்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தார். ஆற்றில் உள்ளவர் வெளியேற முனையும்பொது அவர் வாயில் (ஆற்றின் நடுவில்) நின்றுகொண்டிருந்தவர் கல்லை எறிந்து அவர் முன்பு நின்ற இடத்திலேயே அவரைக் கொண்டுபோய் நிறுத்தினார். அவர் வெளியேற வரும்போதெல்லாம் இவர் அவரது வாயில் கல்லை எறிய, அதனால் அவர் முன்பிருந்த இடத்திற்கே திரும்பிச் சென்று கொண்டிருந்தார். 'அவர் யார்,' என்று (என்னை அழைத்துச் சென்றவர்களிடம்) நான் கேட்டேன், அதற்கவர்கள் 'ஆற்றில் நீர் பார்த்தவர் வட்டி உண்பவராவார்.' எனக் கூறினார்கள். இதை சமுரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(நூல்: புகாரி 2085)
           நிரந்தர நரகத்திற்குச் செல்பவர்கள் பட்டியலில்
மூன்று பேர் இடம் பெறுகிறார்கள்.
1.கொலையாளி
2.காபிர்கள் 
3.வட்டி உண்பவர்.
ஏனைய பாவங்களை அல்லாஹ் நாடினால் குறிப்பிட்ட காலம் தண்டனைக்குப் பிறகு நரகவாசிகளை மன்னித்து சொர்க்கத்தில் சேர்ப்பான்.


நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹுவை அஞ்சுங்கள் !   நீங்கள்  நம்பிக்கை கொண்டிருந்தால் வரவேண்டிய  வட்டியை  விட்டு விடுங்கள்! அவ்வாறு நீங்கள் செய்யவில்லையானால் அல்லாஹ்விடமிருந்தும் அவனது தூதரிடமிருந்தும் போர் பிரகடனத்தை உறுதி செய்து கொள்ளுங்கள் ! நீங்கள் திருந்திக்கொண்டால் உங்கள் செல்வங்களில் முலதனம் உங்களுக்கு உரியது . நீங்களும் அநீதி இழைக்கக்கூடாது.உங்களுக்கும் அநீதி இழைக்கப்படாது.  (அல்குர்ஆன் 2:278 ;279)

  எனவே தோழர்களே வட்டி எனும் கொடும் பாவத்திலிருந்து விலகிக் கொள்ளுங்கள் .இறைவனை அஞ்சுங்கள் .இம்மை மறுமை வெற்றி பெற சிந்தியுங்கள் .

   இஸ்லாத்தினை அதன் தூய வடிவில்  [அல்லாஹ் வழங்கிய அல்குரான் மற்றும் அண்ணல் நபிகள் நாயகம் (ஸல் ) அவர்களின் வழிகாட்டுதல் (ஹதிஸ் ) அடிப்படையில்] அறிந்து நடைமுறைபடுத்திவரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உடுமலை கிளை சார்பாக   
வட்டி இல்லா கடன் உதவி திட்டம் உருவாக்கி நடைமுறைபடுத்தி வருகிறோம். அல்ஹம்துலில்லாஹ்!
வட்டி எனும் கொடும் பாவத்தை அறியாதோருக்கு அதன்கொடுமையை விளக்கி வட்டியில் வீழ்துள்ள நமது உடன் பிறப்புகளை மீட்டு நல்வழிப்படுத்தவும் எடுத்துள்ள இந்த நல்ல முயற்சிக்கு துணை செய்யுங்கள் !


கடன்
நம்பிக்கை  கொண்டோரே ! குறிப்பிட்ட காலக்கெடு விதித்து ஒருவருக்கொருவர் கடன் கொடுத்தால் அதை எழுதிக்கொள்ளுங்கள் !
எழுதுபவர் உங்களுக்கிடையே நேர்மையான முறையில் எழுதட்டும்.அல்லாஹ் தமக்கு கற்றுக்கொடுத்தது போல் எழுதிட எழுதார் மறக்காது எழுதட்டும்.கடன் வாங்கியவர் எழுதுவதுக்குரிய வாசகங்களைச் சொல்லட்டும்!
தனது இறைவனாகிய அல்லாஹுவை அஞ்சிக்கொள்ளட்டும் .அதில் எதையும் குறைத்து  விடகூடாது.கடன் வாங்கியவர் விபரம் அறியாதவராகவோ,பலவீனராகவோ,  எழுதுவதற்கு ஏற்ப ச்சொல்ல இயலாதவராகவோ இருந்தால் அவரது பொறுப்பாளர் நேர்மையாகச் சொல்லட்டும்  
உங்கள் ஆண்களில் இருவரை சாட்சிகளாக்கி கொள்ளுங்கள்.இரு ஆண்கள் இல்லாவிட்டால் சாட்சிகள் என நீங்கள் திருப்தி அடையும் ஒர்ர் ஆணையும் இரண்டு பெண்களையும் (ஆக்கிக்கொள்ளுங்கள்) அவ்விரு பெண்களில் ஒருத்தி தவறாக கூறினால் மற்றொருத்தி நினைவு படுத்துவாள்.அழைக்கப்படும்போது சாட்சிகள் மறுக்கக்கூடாது .
சிறியதோ பெரியதோ தவணை ஐ குறிப்பிட்டு எழுதிக் கொள்வதை அலட்சியம் செய்யாதிர்கள் .இதுவே அல்லாஹுவிடம் நேர்மையானது  .சாட்சியத்தை நிருப்பிக்கத் தக்கது.ஒருவருக்கொருவர் சந்தேகம் கொள்ளாமல் இருப்பதற்கு ஏற்றது..........
அல்லாஹுவை அஞ்சுங்கள் அல்லாஹ் உங்களுக்கு கற்றுத்தருவான் .அல்லாஹ் அனைத்துப் பொருள்களையும் அறிந்தவன் .
(அல்குரான் 2:282)
அடமானம்
நீங்கள் பயணத்திலிருந்து (கடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட வேண்டிய அவசியம் ஏற்பட்டு) எழுத்தாளனையும் (தோதையும்) பெறாவிட்டால் (கடன் பத்திரத்திற்குப் பதிலாக) நீங்கள் அடமானத்தைக் கைப்பற்றிக் (கொண்டு கடன் கொடுத்துக்) கொள்ளுங்கள்' ...............(அல்குர்ஆன் 2:283)


நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் ஒரு யூதனிடம் தம் உருக்குச் சட்டையை அடமானமாக கொடுத்து உணவுப் பொருட்களைக் கடனாகப் பெற்றார்கள்.
(நூல்கள்: புகாரி, முஸ்லிம்)


அல்லாஹுவும் அவனது தூதரும் வழிகாட்டிய அடிப்படையில் ஏழைகளுக்கும், அத்தியாவசிய தேவை உடையோருக்கும் இரண்டு சாட்சி களை கொண்டோ ,அல்லது தங்கம் போன்ற பொருள்களை அடமானமாக பெற்றுக்கொண்டோ குறிப்பிட்ட காலக்கெடு விதித்து
வட்டி இல்லா கடன் உதவி வழங்கி வருகிறோம்.
(கடந்த 31 .12 .2009 முதல்31.12.2010 )வட்டி இல்லா கடன் உதவி திட்டம்  மூலம் இதுவரை ரூ.73 ,000/= கடன் உதவி வழங்கி உள்ளோம் .
அல்ஹம்துலில்லாஹ் !
தமது செல்வங்களை இரவிலும் பகலிலும் இரகசியமாகவும், வெளிப்படையாகவும் (நல்வழியில்) செலவிடுவோருக்கு, தமது இறைவனிடம் அவர்களுக்கான கூலி உண்டு . அவர்களுக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். (அல்குரான் 2 :274 )
தர்மங்களை நீங்கள் வெளிப்படையாக செய்தால்அது நல்லதே அதை(பிறருக்கு) மறைத்து ஏழைகளுக்கு வழங்கினால் அது உங்களுக்கு மிகச்சிறந்தது .உங்கள் தீமை களுக்கு (இதை)பரிகாரமாக (அல்லாஹ்) ஆக்குகிறான் .நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கு அறிந்தவன்.
இஸ்லாத்தினை அறியாதவர்களும் இஸ்லாமிய அடிப்படையை விளங்கி விரும்பக்கூடிய சூழலை உருவாக்கவும்,
இஸ்லாமிய சமுகத்தை கண்ணியமான முறையில் வாழசெய்யவும், 
உங்கள் தீமை களுக்கு பரிகாரமாக ஆக்கும் தர்மத்தை, (உங்கள் செல்வங்களை ) இரவிலும் பகலிலும் இரகசியமாகவும், வெளிப்படையாகவும் (நல்வழியில்) செலவிடுவோருக்கு, தமது இறைவனிடம் அவர்களுக்கான கூலி உண்டு.
என்ற அடிப்படையை உணர்ந்து
இந்த நல்ல பணியில்
உங்களின் பங்களிப்பை வழங்க அன்புடன் அழைக்கிறது ...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
உடுமலை கிளை
மஸ்ஜிதுத்தக்க்வா, 2,எம்.பி.நகர்,
உடுமலை.திருப்பூர் மாவட்டம். தமிழ்நாடு 
bank :city union bank ,udumalai branch a /c . 122497 
(tamilnadu thowheed jamaath,udumalai branch)
contact: +91 99 44 47 61 48,+91 91 50 30 37 76 , +91 99 52 42 02 08 ,+91 91 50 07 43 07 

2 comments:

  1. assalam ,nalla thittam iravanidam dua cheikirom

    ReplyDelete
  2. assalamu alaikum..........

    allah matrum avanudaya thoodhar kattiya vazhiyil intha sunnathai athikarika allahu-vidam dua seikirom............

    Insha allah....

    allahu akubar......

    ReplyDelete