13 November 2016

பெண்ணினத்திற்கு இஸ்லாம் தரும் கண்ணியம்

பெண்களை பற்றி உலகில் உள்ள பல்வேறு மதங்கள், கொள்கைகள், சித்தாந்தங்கள் என்ன சொல்கிறது என்று ஆய்வு செய்து பார்த்தால், இஸ்லாம் தவிர உள்ள மற்ற கொள்கைகள் பெண்களை எவ்வளவு இழிவாக மதிக்கிறது என்பதையும் எளிதாக விளங்கிக் கொள்ள முடியும். அதே வேளையில் இஸ்லாம் பெண்களுக்கு எவ்வளவு கண்ணியம் தருகிறது என்பதையும் விளங்கிக் கொள்ள முடியும்.



பெண்களைப் பற்றி பிறமதங்கள், கொள்கைகள்

*அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு*

*பெண் புத்தி பின் புத்தி*

*ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே*’

04.09.1987 அன்று ராஜஸ்தான் மாநிலம் டியோராலா என்ற கிராமத்தில் ஒரு கோரச் சம்பவம் நடந்தது. ராஜபுத்திர இனத்தைச் சேர்ந்த மால்சிங் என்பவர் இறந்து விடுகிறார். அவருடைய உடலுக்குச் சிதை மூட்டப்படுகிறது. இறுதிச் சடங்கில் ஊர் பொதுமக்கள் கூடி நிற்கிறார்கள். இறந்த கணவனின் தலை, அவனது இளம் மனைவியின் மடியில் இருக்க சிதைக்கு தீ மூட்டப்படுகின்றது. பிணம் மட்டும் அந்தக் கோரத் தீயின் பசிக்கு இரையாகவில்லை. கொழுந்து விட்டு எரிந்த அந்த நெருப்பில் 18 வயது இளம் பெண் ரூப் கண்வாரும் சேர்ந்து எரிகின்றாள்.
பிரஞ்சுக்காரர்கள் 586 ஆம் ஆண்டில் பெண்கள் மனித இனத்தைச் சார்ந்தவர்களா? இல்லையா? என ஆய்வு செய்து முடிவெடுக்க ஒரு சபையை அமைத்தனர்.

 அச்சபை பெண்கள் மனித இனத்தைச் சார்ந்தவர்கள்தான். எனினும் அவர்கள் ஆண்களுக்குப் பணிவிடை செய்வதற்காகவே படைக்கப்பட்டவர்களென முடிவு செய்தது. 1805-ம் ஆண்டு வரை ஆங்கிலேயரின் சட்டத்தில் ஒரு கணவன் தனது மனைவியை விற்பது கூடுமென்றே இருந்துள்ளது. மனைவியின் விலை ஆறு பெனி (அரை ஷிலிங்) என நிர்ணயமும் செய்யப்பட்டது.

இது போன்ற ஏராளமான சம்பவங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

*பெண்ணினத்திற்கு இஸ்லாம் தரும் கண்ணியம்.*

அவர்களில் ஒருவனுக்குப் பெண் குழந்தை பற்றி நற்செய்தி கூறப்பட்டால் அவனது முகம் கருத்து, கவலைப் பட்டவனாக ஆகி விடுகிறான். அவனுக்குக் கூறப்பட்ட கெட்ட(தெனக் கருதிய) செய்தியினால் சமுதாயத்திலிருந்து மறைந்து கொள்கிறான். இழிவுடன் இதை வைத்துக் கொள்வதா? அல்லது மண்ணில் இதை (உயிருடன்) புதைப்பதா? (என்று எண்ணுகிறான்) கவனத்தில் கொள்க! அவர்கள் தீர்ப்பளிப்பது மிகவும் கெட்டது. (அல்குர்ஆன் 16:58,59)

*அவனே உங்களை ஒரே
ஒருவரிலிருந்து படைத்தான். அவரிலிருந்து அவரது துணைவியை அவளிடம் அவர் மன அமைதி பெறுவதற்காகப் படைத்தான்*’ (அல் குர்ஆன் 7:189)



*மனைவியிடம் சிறந்தவர்*

ஒரு  மனிதர் சிறந்தவர் என்று சான்றிதல் தரும் பொறுப்பை இஸ்லாம் பெண்ணிடம் வழங்குகிறது.

*முஃமின்களில் முழுமையானவர் குணத்தால் அழகானவரே! உங்களில் சிறந்தவர் தம் மனைவியிடம் குணத்தால் சிறந்தவராக இருப்பவரே! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்*.
திர்மிதி (1082)



*பெண் சிறந்த சொத்து. சிறந்த செல்வம்.*

ஒரு மனிதன் சேமிக்கும் சொத்துக்களில் சிறந்த ஒன்றை அறிவிக் கட்டுமா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டு விட்டு அதுதான் நல்ல பெண் மணி என்று கூறினார்கள். அபூதாவூத் (1417)

*நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: *இவ்வுலகம் முழுவதும் செல்வமாகும். இவ்வுலகச் செல்வங்களிலேயே சிறந்தது நல்லொழுக்கமுள்ள பெண்ணாவாள்.* அறிவிப்பவர்: அப்தில்லாஹ் பின் அம்ரு (ரலி), நூல்: முஸ்லிம் 2668

நபி (ஸல்) அவர்கüடம் ஒரு மனிதர் வந்து, *அல்லாஹ்வின் தூதரே! நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் தகுதியானவர் யார்?’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘உன் தாய்’ என்றார்கள். அவர், ‘பிறகு யார்?’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘உன் தாய்’ என்றார்கள். அவர், ‘பிறகு யார்?’ என்றார். ‘உன் தாய்’ என்றார்கள். அவர், ‘பிறகு யார்?’ என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘பிறகு, உன் தந்தை என்றார்கள்*

நூல்: புகாரி (5971)



*நரகத்திலிருந்து காக்கும் கேடயம்.*

ஓர் ஏழைப் பெண் தன்னுடைய இரு பெண் குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு என்னிடம் வந்தார். அவருக்கு நான் மூன்று பேரீச்சம் பழங்க ளைக் கொடுத்தேன். உடனே அவர் தம் குழந்தைகளில் ஆளுக்கொரு பேரீச்சம் பழத்தைக் கொடுத்துவிட்டு, ஒரு பேரீச்சம் பழத்தைச் சாப்பிடுவ தற்காக வாயருகில் கொண்டு சென்றார்.
அந்த ஒரு பேரீச்சம் பழத்தையும் அக்குழந்தைகள் கேட்டனர். உடனே அப்பெண் தாம் சாப்பிட நாடியிருந்த அந்தப் பேரீச்சம் பழத்தை இரண்டாகப் பிட்டு அவ்விரு குழந்தைகளிடையே பங்கிட்டுக் கொடுத்துவிட்டார். அவரு டைய நிலை என்னை ஆச்சரியப்படுத்தியது.

ஆகவே, அவர் செய்ததை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களி டம் சொன்னேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘அவரு டைய இச்செயலின் காரணத்தால் அவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தைக் கடமையாக்கிவிட்டான்’. அல்லது ‘அவரது இச்செயலின் காரணத்தால் அவரை நரகத்திலிருந்து விடுதலை செய்துவிட்டான்’ என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: முஸ்லிம் (5126)



பெண்களுக்கு ஏராளமான சலுகைகள்
‘அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவதையே நாங்கள் சிறந்த செயலாகக் கருதுகின்றோம். எனவே நாங்களும் ஜிஹாத் செய்யலாமா?’ என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘இல்லை. எனினும் (பெண்களுக்கு) சிறந்த ஜிஹாத், பாவச் செயல் எதுவும் கலவாத ஹஜ் தான்’ என்றார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 1520

உமர் (ரலி) உடைய மனைவியரில் ஒருவர் சுப்ஹு, இஷா தொழுகை களை பள்ளியில் ஜமாஅத்தாக தொழச் செல்வார்கள். அவரிடம் (உங்கள் கணவர்) உமர் (ரலி) ரோஷக்காரராகவும், இதை விரும்பாதவராகவும் இருப்பதை தெரிந்து கொண்டே நீங்கள் ஏன் (பள்ளிக்குச்) செல்கிறீர்கள்? என்று கேட்கப்பட்ட போது, அதற்கு, அவர் என்னைத் தடுக்க முடியாது. ஏனெனில் பெண்கள் பள்ளிக்குச் செல்வதைத் தடுக்காதீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி (900)

பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன’ (அல்குர்ஆன் 2:228)



நல்ல பெண்கள்.

மேலும் ஒட்டு மொத்த இறை நம்பிக்கையாளர்களுக்கும் முன் மாதிரியாக அல்லாஹ் இரண்டு பெண்களை உதாரணமாகக் கூறுவது பெண் இனத்தின் சிறப்பிற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

‘என் இறைவா! சொர்க்கத்தில் உன்னிடம் எனக்கொரு வீட்டை எழுப்புவாயாக! ஃபிர்அவ்னிடமிருந்தும் அவனது சித்திரவதையிலிருந்தும் என்னைக் காப்பாயாக! அநீதி இழைத்த கூட்டத்திலிருந்தும் என்னைக் காப்பாயாக!’ என்று ஃபிர்அவ்னின் மனைவி கூறியதால் அவரை நம்பிக்கை கொண்டோருக்கு அல்லாஹ் முன்னுதாரணமாகக் கூறுகிறான். இம்ரானின் மகள் மர்யமையும் (இறைவன் முன் உதாரணமாகக் கூறுகிறான்) அவர் தமது கற்பைக் காத்துக் கொண்டார். அவரிடம் நமது உயிரை ஊதினோம். அவர் தமது இறைவனின் வார்த்தைகளையும், அவனது வேதங்களையும் உண்மைப் படுத்தினார். அவர் கட்டுப்பட்டு நடப்பவராகவும் இருந்தார். (அல்குர்ஆன் 66:11,12)

ஒட்டகங்களில் பயணம் செய்த (அரபுப்) பெண்கலேயே சிறந்தவர்கள், நல்ல குறைஷிக் குலப் பெண்களாவர். அவர்கள் குழந்தைகள் மீது அதிகப் பாசம் கொண்டவர்கள்ளூ தம் கணவனின் செல்வத்தை அதிகமாகப் பேணிக் காப்பவர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர) நூல்: புகாரி (5082), முஸ்லிம் (4946)

சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறினார்கள் : (மதீனாவில்) எங்களிடையே (வயது முதிர்ந்த) பெண்மணி ஒருவர் இருந்தார். அவர் தமது தோட்டத்தின் வாயக்கால் வரப்பில் தண்டுக் கீரைச் செடியை பயிர் செய்வார். வெள்ளிக்கிழமை வந்துவிட்டால் அவர் அந்தக் கீரையின் தண்டுகளைப் பிடுங்கி வந்து ஒரு பாத்திரத்தில் போடுவார். அதில் ஒரு கையளவு வாற்கோதுமையை போட்டுக் கடைவார். அந்தக் கீரைத் தண்டுதான் (எங்கள்) உணவில் மாமிசம் போன்று அமையும். நாங்கள் ஜுமுஆத்தொழுகை தொழுதுவிட்டுத் திரும்பி வந்து அவருக்கு சலாம் சொல்வோம் அந்த உணவை அவர் எங்களுக்குப் பரிமாறுவார். அதை நாங்கள் ருசித்துச் சாப்பிடுவோம். அவருடைய அந்த உணவுக்காக நாங்கள் வெள்ளிக்கிழமையை (அது எப்போது வருமென) எதிர்பார்த்துக்கொண்டிருப்போம். புகாரி (938)

நபி (ஸல்) அவர்களின் மனைவியரில் ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், ‘உங்களது மரணத்திற்குப் பின் எங்களில் யார் முதலில் உங்களை வந்து சேர்வார்?’ என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘உங்களில் கை நீளமானவர் தான்’ என்று கூறினார்கள். உடனே அவர்கள் ஒரு குச்சியை எடுத்துத் தங்களின் கைகளை அளந்து பார்த்த போது ஸவ்தா (ரலி) அவர்களின் கைகளே மிகவும் நீளமானவையாக இருந்தன. (ஸைனப் (ரலி) இறந்த) பிறகு தான் கை நீளமானவர் என்பது, அதிக தர்மம் செய்பவரைக் குறிக்கின்றது என்பதை நாங்கள் அறிந்தோம். (ஸைனப்) அதிக தர்மம் செய்பவராக இருந்ததால் தான் முதலில் நபி (ஸல்) அவர்களை அடைந்தார். மேலும் அவர் தர்மம் செய்வதை விரும்பக் கூடியவராகவும் இருந்தார். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 1420

No comments:

Post a Comment