தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் உடுமலை கிளை சார்பாக
22/11/2025 சனிக்கிழமை பஜ்ர் தொழுகைக்கு பின் உடுமலை M.P.நகர் மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில் குர்ஆன் வகுப்பு நடத்தப்பட்டது.
இதில் சகோதரர் அப்துல்லாஹ் அவர்கள்
திருக்குர்ஆன் அத்தியாயம் 11: வசனம் 111-113
அவர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களின் செயல்(களின் பலன்)களை உமது இறைவன் முழுமையாகக் கொடுப்பான். அவர்கள் செய்வதை அவன் நன்கறிந்தவன்
நபியே!) உமக்கு ஏவப்பட்டவாறு நீரும், திருந்தி உம்முடன் இருப்போரும் உறுதியாக இருங்கள். வரம்பு மீறி விடாதீர்கள்! நீங்கள் செய்பவற்றை அவன் பார்ப்பவன்.
அநியாயம் செய்வோரை நோக்கிச் சாய்ந்து விடாதீர்கள்! அவ்வாறாயின், உங்களை நரக நெருப்புத் தீண்டி விடும். அல்லாஹ்வைத் தவிர உங்களுக்குப் பாதுகாவலர்கள் யாருமில்லை. நீங்கள் உதவி செய்யப்படவும் மாட்டீர்கள்.
என்பதை படித்து விளக்கம் வழங்கி உரையாற்றினார்கள்.
சகோதரர்கள் கலந்து பயண்பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்

No comments:
Post a Comment