09 November 2025

குர்ஆன் வகுப்பு _11: வசனம் 82 - 84 _09112025

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் உடுமலை கிளை சார்பாக  

09/11/2025 ஞாயிறு பஜ்ர் தொழுகைக்கு பின்

 உடுமலை M.P.நகர் மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில் குர்ஆன் வகுப்பு நடத்தப்பட்டது.


 இதில் சகோதரர்  அப்துல்லாஹ் அவர்கள் 


 திருக்குர்ஆன் அத்தியாயம் 11: வசனம் 82 - 84


நமது கட்டளை வந்தபோது, அவ்வூரின் மேற்புறத்தைக் கீழ்ப்புறமாக ஆக்கினோம். உமது இறைவனிடம் அடையாளமிடப்பட்ட, அடுக்கடுக்கான, சுடப்பட்ட கற்களை அவர்கள்மீது பொழிந்தோம். அது இந்த அநியாயக்காரர்களுக்குத் தூரத்தில் இல்லை.


மத்யன்வாசிகளிடம் அவர்களின் சகோதரர் ஷூஐபை (அனுப்பினோம்.) “என் சமுதாயத்தினரே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனைத் தவிர எந்தக் கடவுளும் இல்லை. அளவிலும் நிறுவையிலும் குறைவை ஏற்படுத்தாதீர்கள்! உங்களை நல்ல நிலையிலேயே நான் காண்கிறேன். சுற்றி வளைக்கும் ஒரு நாளின் தண்டனையை உங்கள் விஷயத்தில் அஞ்சுகிறேன்” என்று அவர் கூறினார்.


என்பதை படித்து விளக்கம் வழங்கி உரையாற்றினார்கள்.



அதிகமான சகோதரர்கள் கலந்து பயண்பெற்றனர்.


அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment