தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) கோவை தெற்கு மாவட்டம் உடுமலை கிளை சார்பாக
MP நகர் மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில் 08/11/2025 சனிக்கிழமை மாலை
"கேள்வி இங்கே! பதில் எங்கே!" எனும் பெண்கள் மார்க்க விளக்க கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதில் சகோதரி. அஸ்மா.BISc., அவர்கள் திருக்குர்ஆனிலிருந்தும், நபிமொழிகளில் இருந்தும் கேள்விகள்
கேட்டு கலந்து கொண்டவர்கள் பதில் வழங்கிய பிறகு அதன் விளக்கத்தை வழங்கினார்கள்.
இந்த நிகழ்ச்சி திருக்குர்ஆனோடும், நபிமொழிகள் மற்றும் இஸ்லாமிய அடிப்படைகளை அறிந்து மார்க்க அறிவை வளர்த்துக் கொள்ளவும் வாய்ப்பாக அமைந்தது.
அல்ஹம்துலில்லாஹ்!!
நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகள் :
1.இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட முதல் பெண்மணி யார் ?
2.திரும்பத் திரும்ப ஓதப்படும் ஏழு வசனங்கள் எது ?
3.குர்ஆனில் எந்த விலங்கின் பெயர் திரும்ப திரும்ப கூறப்பட்டுள்ளது ?
4.நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எத்தனை உம்ரா செய்தார்கள் ?
5.எந்த பறவை சுலைமான் நபிக்கு செய்தி கொண்டு வந்தது?
6.குர்ஆனில் நேரடியாக பெயர் குறிப்பிடப்பட்ட பெண் யார் ?
7.சிறந்த சமுதாயம் என்று இறைவன் யாரை குறிப்பிடுகிறான் ?
8.மனிதர்களுக்கு எத்தனை மரணம் ஏற்படும்? எத்தனை முறை உயிர் கொடுக்கப்படும் என்று இறைவன் கூறுகிறான் ?
9.மூமின்களை அல்லாஹ் எவ்வாறு சோதிப்பதாகக் கூறுகிறான் ?
10.தடை செய்யப்பட்ட உணவுகள் எவை ?
11.ஈஸா நபி செய்த அற்புதங்கள் என்ன ?
12.வறுமையில் நயவஞ்சகனின் நிலை என்ன ?
13.அல்லாஹ் மட்டுமே அறிந்த மறைவான விஷயங்கள் எவை ?
14.18 நபிமார்களின் பெயர்களை அல்லாஹ் அடுத்தடுத்து கூறிய அத்தியாயம் எது ?
15.நூஹ் நபியின் சமுதாயத்தை அல்லாஹ் எவ்வாறு அழித்தான் ?
16.சமூத் சமுதாயத்தின் நபி யார் அவர்களுக்கு வழங்கப்பட்ட அற்புதம் என்ன ?
17.மதியன் என்ற சமுதாயத்தின் நபி யார்? அவர்கள் என்ன பாவம் செய்தார்கள் ?அவர்களை இறைவன் எவ்வாறு அழித்தான் ?
18.நரகத்திற்கு எத்தனை வாசல்கள் உள்ளன ?
19.மஸ்ஜிதுன் நபவியல் தொழுவது மற்ற பள்ளிகளில் தொழுவதை விட எத்தனை மடங்கு சிறந்தது ?
20.குர்ஆனை ஓத ஆரம்பிக்கும் முன் என்ன செய்ய வேண்டும் ?
21அல்லாஹ்வே பெயர் வைத்த நபி யார் ?
22.கல் மழை பொழிய வைத்து இறைவன் அளித்த சமுதாயம் எது ?
23.சந்திரனை பிளந்து காட்டிய நபி யார் ?
24.மொஹரம் பத்தாம் நாளில் நீரில் மூழ்கி கொல்லப்பட்டவன் யார் ?
25.நபியவர்கள் நரகத்தில் யாரை அதிகமாக பார்த்தார்கள் ?
26.எந்த நபியின் உயிர் இன்னும் கைப்பற்றப்படவில்லை?

No comments:
Post a Comment