11 November 2025

குர்ஆன் வகுப்பு _11: வசனம் 87 - 88_10112025

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் உடுமலை கிளை சார்பாக  

11/11/2025 செவ்வாய் பஜ்ர் தொழுகைக்கு பின்

 உடுமலை M.P.நகர் மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில் குர்ஆன் வகுப்பு நடத்தப்பட்டது.


 இதில் சகோதரர்  அப்துல்லாஹ் அவர்கள் 


 திருக்குர்ஆன் அத்தியாயம் 11: வசனம் 87 - 88


“ஷுஐபே! எங்கள் முன்னோர் வணங்கியவற்றையும், எங்கள் செல்வங்களை நாங்கள் விரும்பிவாறு பயன்படுத்திக் கொள்வதையும் விட்டுவிட வேண்டுமென உமது தொழுகைதான் உமக்கு ஏவுகிறதா? நீரே சகிப்புத்தன்மை மிக்கவர்; நேர்மையாளர்” என்று அவர்கள் (கிண்டலாகக்) கூறினர்.


என் சமுதாயத்தினரே! எனது இறைவனிடமிருந்து வந்துள்ள தெளிவான சான்றில் நான் இருப்பதையும், அவன் தனது அழகிய வாழ்வாதாரத்தை எனக்கு வழங்கியிருப்பதையும் சிந்தித்தீர்களா? எதை விட்டும் உங்களைத் தடுக்கிறேனோ அதில் உங்களிடம் மாற்றமாக நடப்பதற்கு நான் விரும்பவில்லை. என்னால் இயன்றவரை சீர்திருத்தத்தைத் தவிர வேறெதையும் நான் நாடவில்லை. எனக்குரிய உதவி அல்லாஹ்வைக் கொண்டே தவிர வேறில்லை. அவன் மீதே நம்பிக்கை வைத்துள்ளேன். அவனிடமே திரும்புகிறேன்” என்று அவர் கூறினார்.


என்பதை படித்து விளக்கம் வழங்கி உரையாற்றினார்கள்.


அதிகமான சகோதரர்கள் கலந்து பயண்பெற்றனர்.


அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment