தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் உடுமலை கிளை பொது மசூரா
உடுமலை மஸ்ஜிதுத் தக்வா பள்ளியில் 30/11/2025 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு
மாவட்டத் தலைவர் சாதிக் அலி தலைமையில் மாவட்ட துணைத் தலைவர் அப்துல் ரஷீத் மற்றும் மாவட்ட தொண்டரணி ஷபீக் அவர்கள் முன்னிலையில்
நடைபெற்றது.
ஆரம்பமாக கிளை தலைவர் அப்துல் ரஹ்மான் அவர்கள் பொதுமசூரா அவசியமும் கடமையும் எனும் தலைப்பிலும் ஆரம்ப உரை நிகழ்த்த
கிளைச் செயலாளர் முகமது தன்வீர் அவர்கள் இந்த மாதம் செயல்படுத்திய தாவா பணிகள் சமுதாய சேவை பணிகளின் விபரங்களை விளக்கினார்கள்.
கிளை பொருளாளர் முகமது ஆசிக் அவர்கள் இந்த மாத வரவு செலவு விவரங்களையும், வருங்கால பொருளாதாரத் தேவைகளின் விபரங்களையும் தெரிவித்தார்கள்.
கிளை துணைத் தலைவர் பஜூலுல்லாஹ் அவர்கள் கிளை சார்பில் நடைபெறுகிற பெண்கள் பயானின் அவசியத்தையும் பயன்களையும் விளக்கி அனைவரும் தங்கள் இல்லங்களில் நடத்த கேட்டுக் கொண்டார்கள்.
கிளை துணைச் செயலாளர் ஹாஸிம் அஸ்லம் அவர்கள் மர்கஸ் இமாம் பற்றியும் பள்ளியில் நடைபெறுகின்ற சிறுவர் மக்தப் மதரஸா பெரியவர்களுக்கான பஜ்ர் நேர மதரஸா பற்றிய தகவல்களை அறிவித்து அனைவரும் பயன்படுத்திக் கொள்ள ஆர்வமூட்டினார்கள்.
கிளை மருத்துவணி நயீமுல்லாஹ் அவர்கள் இந்த மாதம் வழங்கிய இரத்ததானம் மருத்துவ சேவைகள் பற்றியும் அனைவரும் இந்த சேவையில் பங்கேற்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
தொண்டரணி செயலாளர் ரபீக் அவர்கள் மர்கஸ் மராமத்து பணிகள் குறித்தும் வருங்கால ஏற்பாடுகள் குறித்தும் தகவல்களை தெரிவித்தார்கள்.
வர்த்தக அணி செயலாளர் ஜாபர் அலி அவர்கள் யுகேசி நகர் பகுதியில் மர்கஸ் மதரஸாவிற்காக இடம் சம்பந்தமான விவரங்களை தொகுத்து வழங்கி அனைவரும் ஒத்துழைக்க கோரினார்கள்
இறுதியாக மாவட்ட தலைவர் சாதிக்அலி அவர்கள்
குறை நிறைகள் குறித்து கருத்து கேட்டு
கிளையின் செயல்பாடுகளை இன்னும் வீரியமாக செயல்படுத்த அனைவரும் ஒத்துழைக்க கேட்டு இனிதாக நிறைவு பெற்றது,
உடுமலை கிளை
பொது மசூரா!
தொடர்ந்து UKC நகர்
பகுதி மர்கஸ் மதரஸா அமைத்து தாவா பணி செய்வதற்கு
ஒரு நிர்வாகம் அவசியம் என
மாவட்ட நிர்வாகம் சார்பில்
எடுத்துச் சொல்லி UKCநகர் கிளை நிர்வாக தேர்வு நடைபெற்று புதிய UKCநகர் கிளை உருவாக்கப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்

No comments:
Post a Comment