தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் உடுமலை கிளை சார்பாக
18/12/2025 வியாழன் பஜ்ர் தொழுகைக்கு பின்
உடுமலை M.P.நகர் மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில் குர்ஆன் வகுப்பு நடத்தப்பட்டது.
இதில் சகோதரர் அப்துல்லாஹ் அவர்கள்
திருக்குர்ஆன் அத்தியாயம் 12: வசனம் 38- 40
என் மூதாதையரான இப்ராஹீம், இஸ்ஹாக், யஃகூப் ஆகியோரின் மார்க்கத்தைப் பின்பற்றுகிறேன். அல்லாஹ்வுக்கு எதையும் நாம் இணையாக்குவது நமக்குத் தகுதியானதல்ல! இது, நம்மீதும், மக்கள்மீதும் அல்லாஹ் புரிந்த அருளாகும். எனினும் மக்களில் அதிகமானோர் நன்றி செலுத்த மாட்டார்கள்.
இரு சிறைத் தோழர்களே! பல்வேறு கடவுள்கள் நல்லதா? அல்லது அடக்கியாளும் ஒருவனான அல்லாஹ்வா?”
அவனையன்றி நீங்கள் வணங்குபவை, நீங்களும் உங்கள் முன்னோரும் சூட்டிக் கொண்ட (வெறும்) பெயர்களைத் தவிர வேறில்லை. இதற்கு எந்த ஆதாரத்தையும் அல்லாஹ் அருளவில்லை. அதிகாரம் அனைத்தும் அல்லாஹ்வுக்கே தவிர வேறில்லை. அவனைத் தவிர வேறு யாரையும் நீங்கள் வணங்கக்கூடாது என அவன் ஆணையிட்டுள்ளான். இதுவே நேரான மார்க்கம். எனினும் மனிதர்களில் அதிகமானோர் அறிந்து கொள்வதில்லை”
என்பதை படித்து விளக்கம் வழங்கி உரையாற்றினார்கள்.
சகோதரர்கள் கலந்து பயண்பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்

No comments:
Post a Comment