தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் உடுமலை கிளை சார்பாக
23/10/2025 வியாழன் பஜ்ர் தொழுகைக்கு பின்
உடுமலை M.P.நகர் மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில் குர்ஆன் வகுப்பு நடத்தப்பட்டது.
இதில் சகோதரர் *அப்துல்லாஹ்* அவர்கள்
திருக்குர்ஆன் அத்தியாயம் 11: வசனம் 44-46
44. பூமியே! உனது தண்ணீரை விழுங்கிக் கொள்! வானமே! நீயும் நிறுத்திக் கொள்!” என்று கூறப்பட்டது. தண்ணீர் வடிந்தது. காரியம் முடிக்கப்பட்டது. அக்கப்பல் ஜூதி மலைமீது நிலை கொண்டது. “அநியாயக்காரக் கூட்டத்தாருக்கு அழிவுதான்!” என்று கூறப்பட்டது.
45. நூஹ், தமது இறைவனை அழைத்து, “என் இறைவனே! எனது மகன் என் குடும்பத்தைச் சார்ந்தவன். உனது வாக்குறுதி உண்மையானது. நீயே தீர்ப்பளிப்போரில் மிகச் சிறந்த தீர்ப்பளிப்பவன்” என்று கூறினார்.
46. நூஹே! அவன் உமது குடும்பத்தைச் சார்ந்தவன் அல்ல! இ(வ்வாறு பிரார்த்திப்ப)து சிறந்த செயலும் அல்ல! எதுபற்றி உமக்கு அறிவு இல்லையோ அதை நீர் என்னிடம் கேட்க வேண்டாம். நீர் அறியாதவர்களில் ஒருவராகிவிட வேண்டாம் என உமக்கு நான் அறிவுறுத்துகிறேன்” என்று (இறைவன்) கூறினான்.
என்பதை படித்து விளக்கம் வழங்கி உரையாற்றினார்கள்.
அதிகமான சகோதரர்கள் கலந்து பயண்பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்

No comments:
Post a Comment