29 October 2025

குர்ஆன் வகுப்பு _11: வசனம் 57-58_ 29102025


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் உடுமலை கிளை சார்பாக  


29/10/2025 புதன் பஜ்ர் தொழுகைக்கு பின்

 உடுமலை M.P.நகர் மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில் குர்ஆன் வகுப்பு நடத்தப்பட்டது.


 இதில் சகோதரர்  *அப்துல்லாஹ்* அவர்கள் 


 திருக்குர்ஆன் அத்தியாயம் 11: வசனம் 57-58


 நீங்கள் புறக்கணித்தால், எதைக் கொண்டு உங்களிடம் அனுப்பப்பட்டேனோ அதை உங்களுக்கு எடுத்துரைத்து விட்டேன். என் இறைவன் உங்களுக்கு மாற்றாக வேறு சமுதாயத்தைக் கொண்டு வருவான். நீங்கள் அவனுக்குச் சிறிதும் தீங்கிழைக்க முடியாது. என் இறைவன் ஒவ்வொரு பொருளையும் கண்காணிப்பவன்” (என்றும் கூறினார்.)


நமது உத்தரவு வந்தபோது, நம் அருளால் ஹூதையும், அவருடனிருந்த இறைநம்பிக்கை கொண்டோரையும் காப்பாற்றினோம். அவர்களைக் கடும் வேதனையிலிருந்தும் காப்பாற்றினோம்.


என்பதை படித்து விளக்கம் வழங்கி உரையாற்றினார்கள்.



அதிகமான சகோதரர்கள் கலந்து பயண்பெற்றனர்.


அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment