12 October 2025

குர்ஆன் வகுப்பு_11:20-22 _12102025




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் உடுமலை கிளை சார்பாக  12/10/2025 ஞாயிறு பஜ்ர் தொழுகைக்கு பின்

 உடுமலை M.P.நகர் மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில் குர்ஆன் வகுப்பு நடத்தப்பட்டது.

 இதில் சகோதரர்  *அப்துல்லாஹ்* அவர்கள்  திருக்குர்ஆன் அத்தியாயம் 11: வசனம் 20 முதல் 22 வரை 

20. அவர்கள் பூமியில் தப்பிப்போராக இல்லை. அல்லாஹ்வையன்றி அவர்களுக்குப் பாதுகாவலர்கள் இல்லை. அவர்களுக்கு வேதனை இரு மடங்காக்கப்படும். அவர்கள் செவியேற்கச் சக்தி பெற்றோராக இருக்கவில்லை; பார்ப்போராகவும் இருக்கவில்லை.


21. அவர்கள்தான் தமக்கே நஷ்டத்தை ஏற்படுத்திக் கொண்டவர்கள். அவர்கள் பொய்யாக உருவாக்கிக் கொண்டிருந்தவை அவர்களை விட்டும் மறைந்து விடும்.


22. உண்மையாகவே அவர்கள்தான் மறுமையில் மிகவும் நஷ்டமடைந்தவர்கள்.


படித்து விளக்கம் வழங்கி உரையாற்றினார்கள்.


அதிகமான சகோதரர்கள் கலந்து பயண்பெற்றனர்.


அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment