31 October 2025

உடுமலை நகர கிளை பொது மஷூரா _(2 ) -31/10/2025


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் உடுமலை நகர கிளை சார்பாக

31/10/2025 வெள்ளிக்கிழமை மஃரிப் தொழுகைக்குப் பிறகு
உடுமலை மஸ்ஜிதுத்தக்வா பள்ளிவாசலில் *உடுமலை நகர கிளை பொது மஷூரா*
மாவட்ட தலைவர் சாதிக் அலி தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த முக்கியத்துவம் வாய்ந்த ஆலோசனைக் கூட்டத்தில்
புதிய நிர்வாகம் தேர்வு செய்யப்பட்ட பிறகு நடைபெற்ற செயல்பாடுகளில்
மருத்துவ உதவிகள் மற்றும் இரத்ததான சேவைகள் பற்றி உடுமலை நகர கிளை மருத்துவஅணி செயலாளர் சகோதரர் நயீமுல்லாஹ் அவர்களும்,
நன்கொடை, நிதி வசூல் வரவு செலவுகள் பற்றி உடுமலை நகர கிளை பொருளாளர் சகோதரர்
ஆசிக் ரஹ்மான் அவர்களும்,
கிளை சார்பில் நடைபெற்ற
தாவா பணிகள் சமுதாய சேவை பணிகளின் தொகுப்பை உடுமலை நகர கிளை செயலாளர் சகோதரர். முஹம்மது தன்வீர் அவர்களும்,
இன்ஷாஅல்லாஹ் வருங்காலத்தில் நடைமுறை படுத்தவுள்ள தாவா பணிகள் மற்றும் செயல் திட்ட விபரங்களை உடுமலை நகர கிளை துணைசெயலாளர் அஹமது அஸ்லம் அவர்களும்
கலந்து கொண்ட சகோதரர்கள் மத்தியில் விபரமாக தெரிவித்தார்கள்.
தொடர்ந்து உடுமலை நகர
கிளைத்தலைவர் அப்துல்ரஹ்மான் அவர்கள் நடந்த நடைபெறவுள்ள பணிகளில் விடுப்பட சில தகவல்களுடன்
கிளை உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் அனைவரும் சிறந்த
ஒத்துழைபபு வழங்கியதற்கு நன்றியும் வருங்காலத்தில் இன்னும் கூடுதலாக ஆதரவளிக்க கேட்டுக் கொண்டார்.
மாவட்ட தலைவர் சகோதரர் சாதிக் அலி அவர்கள்
உடுமலை கிளை நிர்வாக குழு சார்பில் சிறப்பாக தாவா மற்றும் சமுதாய சேவை பணிகளை செய்தது மாவட்ட நிர்வாகத்திற்கே ஊக்கமளிப்பதாக அமைந்தது என பாராட்டி இதை இன்னும் வீரியமாக தொடர்ந்து தொய்வில்லாமல் செயல்படுத்துங்கள், தனிநபர் தாவா பணியை அதிகமதிகம் செய்யுங்கள் எனவும் ஆலோசனை வழங்கினார்கள்.
இறுதியாக மாவட்ட செயலாளர் சகோதரர். இத்ரீஸ் அவர்கள் "தாவா பணி நம் அனைவரின் கடமை" என்பதை குர்ஆன் ஹதீஸ் விபரங்களுடன் தெளிவுபடுத்தி
வருங்காலத்தில் அனைவரும் கடமையான தாவாபணியை செயல்படுத்த வேண்டும் எனும் அறிவுறையுடன்
பொது மஷூரா நிறைவுபெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment