06 November 2025

பொறாமை_ மர்கஸ் பயான் (10) _05112025

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) உடுமலை நகர கிளை சார்பாக

உடுமலை M P நகர் *மஸ்ஜிதுத்தக்வா* மர்கஸில்
*05/11/2025 புதன் மக்ரிப்* தொழுகைக்கு பின் மர்கஸ் பயான் நடைபெற்றது.
அதில் சகோதரர். அப்துல்ரஹ்மான் அவர்கள் "பொறாமை" எனும் தலைப்பில்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரண்டு விஷயங்களைத் தவிர வேறெதற்காகவும் பொறாமை கொள்ளக் கூடாது.
ஒரு மனிதருக்கு அல்லாஹ் குர்ஆனைக் கற்றுத் தந்தான். அவர் அதனை இரவு, பகல் எல்லா நேரங்களிலும் ஓதிவருகிறார். இதைக் கேள்விப்பட்டு அவருடைய அண்டை வீட்டுக்காரர், இன்னாருக்கு வழங்கப்பட்டது போல் எனக்கும் வழங்கப்பட்டிருந்தால் நானும் அவர் செயல்படுவது (ஓதுவது) போல் செயல்பட்டிருப்பேனே (ஓதியிருப்பேனே)! என்று கூறுகின்றார்.
இன்னொரு மனிதருக்கு அல்லாஹ் செல்வத்தை வழங்கினான். அவர் அதனை நல்வழியில் செலவிட்டு வருகிறார். (இதைக் காணும்) ஒரு மனிதர், இன்னாருக்கு வழங்கப்பட்டது போல் எனக்கும் (செல்வம்) வழங்கப்பட்டிருக்குமானால் அவர் (தர்மம்) செய்தது போல் நானும் செய்திருப்பேனே என்று கூறுகின்றார்.
(புகாரி: 5026)
என்பதை விளக்கி உரையாற்றினார்கள்.
சகோதர சகோதரிகள் கலந்து பயன் பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment