06 November 2025

குர்ஆன் வகுப்பு _11: வசனம் 74 - 77_ 06112025

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் உடுமலை கிளை சார்பாக

06/11/2025 வியாழன் பஜ்ர் தொழுகைக்கு பின்
உடுமலை M.P.நகர் மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில் குர்ஆன் வகுப்பு நடத்தப்பட்டது.
இதில் சகோதரர் *அப்துல்லாஹ்* அவர்கள்
திருக்குர்ஆன் அத்தியாயம் 11: வசனம் 74-77
இப்ராஹீமிடமிருந்து பயம் நீங்கி, அவரிடம் நற்செய்தி வந்தபோது, லூத்தின் சமுதாயத்தைப் பற்றி நம்மிடம் வாதிடலானார்.
இப்ராஹீம் சகிப்புத் தன்மை கொண்டவர்; இரக்கமுடையவர்; (அல்லாஹ்வை நோக்கித்) திரும்பக் கூடியவர்.
இப்ராஹீமே! இ(வ்வாறு வாதிப்ப)தைத் தவிர்ப்பீராக! உமது இறைவனின் கட்டளை வந்து விட்டது. தடுக்க முடியாத வேதனை அவர்களை வந்தடையும்” (என்று கூறப்பட்டது.)
லூத்திடம் நமது தூதர்கள் வந்தபோது, அவர்களைப் பற்றி அவர் கவலைக்குள்ளானார். அவர்களுக்காக மன வேதனையடைந்து, “இது மிகவும் கடுமையான நாள்” என்று கூறினார்.
என்பதை படித்து விளக்கம் வழங்கி உரையாற்றினார்கள்.
அதிகமான சகோதரர்கள் கலந்து பயண்பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment