14 November 2025

குர்ஆன் வகுப்பு _11: வசனம் 93- 95_14112025

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் உடுமலை கிளை சார்பாக  


14/11/2025 வெள்ளிக்கிழமை பஜ்ர் தொழுகைக்கு பின்

 உடுமலை M.P.நகர் மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில் குர்ஆன் வகுப்பு நடத்தப்பட்டது.


 இதில் சகோதரர்  அப்துல்லாஹ் அவர்கள் 


 திருக்குர்ஆன் அத்தியாயம் 11: வசனம் 93- 95


“எனது சமுதாயத்தினரே! உங்கள் நிலைப்பாட்டின்படி நீங்கள் செயல்படுங்கள்! நானும் செயல்படுகிறேன். இழிவுபடுத்தும் தண்டனை யாருக்கு வரும் என்பதையும், யார் பொய்யர் என்பதையும் அறிந்து கொள்வீர்கள். நீங்களும் எதிர்பாருங்கள்! உங்களுடன் நானும் எதிர்பார்க்கிறேன்” (என்றும் கூறினார்.)


நமது உத்தரவு வந்தபோது, நம் அருளால் ஷுஐபையும், அவருடனிருந்த இறைநம்பிக்கை கொண்டோரையும் காப்பாற்றினோம். அநியாயம் செய்தோரைப் பெரும் சப்தம் தாக்கியது. அவர்கள் அங்கு வாழ்ந்ததேயில்லை என்பதைப் போன்று, தமது வீடுகளில் முகம் குப்புற வீழ்ந்து கிடந்தனர். அறிந்து கொள்ளுங்கள்! ஸமூது சமுதாயம் அழிந்தது போன்றே மத்யன்வாசிகளுக்கும் அழிவுதான்!



என்பதை படித்து விளக்கம் வழங்கி உரையாற்றினார்கள்.



அதிகமான சகோதரர்கள் கலந்து பயண்பெற்றனர்.


அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment