06 December 2025

நல்லதை பேசுவோம்_ மர்கஸ் பயான் (14 ) _06122025


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் உடுமலை கிளை சார்பாக

06/12/2025 சனிக்கிழமை பஜ்ர் தொழுகைக்கு பின்
உடுமலை M.P.நகர் மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில் 10நிமிட பயான் நடத்தப்பட்டது.
இதில் சகோதரர் *அப்துரஹ்மான்* அவர்கள்
நல்லதை பேசுவோம்
எனும் தலைப்பில்
நபிகள் நாயகம் {ஸல்} அவர்கள் கூறினார்கள் :
அல்லாஹுவையும், மறுமையும் நம்பியவர் பேசினால் நல்லதை பேசுங்கள் அல்லது வாய் மூடி இருந்து விடுங்கள்.
:(புகாரி 6012)
என்பதையும்
முஸ்லிம்களில் சிறந்தவர் யார்? என நபிகள் நாயகத்திடம் வினவப்பட்ட போது, அவர்கள்
யாருடைய நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் முஸ்லிம்கள் ஈடேற்றம் பெறுகிறார்களோ, அவர்தான் சிறந்தவர் என பதில் கூறினார்கள் :
(புகாரி 10)
என்பதையும்
கூடுதலாக
அல்லாஹ் கூறுகிறான்
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَقُوْلُوْا قَوْلًا سَدِيْدًا ۙ‏
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! நேர்மையான சொல்லையே கூறுங்கள்!
(அல்குர்ஆன்: 33:70)
என்பதையும்
எந்த காரியத்தை நான் செய்தால் சொர்க்கத்திற்குச் செல்வேனோ அப்படிப்பட்ட ஒரு காரியத்தை எனக்கு கற்றுக் கொடுங்கள்” என்று கூறினேன். “சலாத்தைப் பரப்பு. நல்ல பேச்சைப் பேசு. உறவுகளை இணைத்து வாழ். மக்கள் உறங்கும் போது இரவில் நின்று வணங்கு. சாந்தியுடன் சொர்க்கத்தில் நுழைவாய்” என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறி : அபூஹுரைரா (ரலி)
என்பதையும் சொல்லி விளக்கம் வழங்கினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment