07 December 2025

மறப்போம் மன்னிப்போம்_ மர்கஸ் பயான் (15 ) _07122025

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் உடுமலை கிளை சார்பாக

07/12/2025 ஞாயிறு பஜ்ர் தொழுகைக்கு பின்
உடுமலை M.P.நகர் மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில் 10நிமிட பயான் நடத்தப்பட்டது.
இதில் சகோதரர் *அப்துரஹ்மான்* அவர்கள்
மறப்போம் மன்னிப்போம்
எனும் தலைப்பில்
ஒவ்வொரு வியாழன் மற்றும் திங்கள் கிழமைகளில் (நாம் செய்த) அமல்கள் (அல்லாஹ்விடம்) எடுத்துக் காட்டப்படும்.
அப்போது அல்லாஹ்விற்கு இணை வைக்காத ஒவ்வொரு மனிதனின் தவறுகளையும் அந்நாளில் அல்லாஹ் மன்னிப்பான்.
தன் சகோதரனுக்கிடையில் சண்டையிட்டுள்ள ஒருவனைத் தவிர!
அவர்கள் இருவரும் சமாதானம் செய்து கொள்ளும் வரை அவனை விட்டு விடுங்கள் என்று கூறப்படும்.
நூல்:முஸ்லிம்5014 (4653)
எனும் ஹதீஸ் க்கும்
நம்பிக்கை கொண்டோர் (அனைவரும்) சகோதரர்கள்தாம். எனவே உங்கள் சகோதரர்களுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள். அருள் செய்யப்படுவீர்கள்.
(அல்குர்ஆன்: 49:10) க்கும் விளக்கம் வழங்கி
மன்னிப்பு
முஸ்லிமிடம் அவசியம் இருக்க வேண்டிய பண்பு என்பதையும்,
மன்னிக்கும் தன்மையை செயல்படுத்தி இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெறுவோம்
என உரை நிகழ்த்தினார்கள்
அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment