தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் உடுமலை கிளை சார்பாக
19/12/2025 வெள்ளி பஜ்ர் தொழுகைக்கு பின்
உடுமலை M.P.நகர் மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில் குர்ஆன் வகுப்பு நடத்தப்பட்டது.
இதில் சகோதரர் அப்துல்லாஹ் அவர்கள்
திருக்குர்ஆன் அத்தியாயம் 12: வசனம் 41- 43
இரு சிறைத் தோழர்களே! உங்கள் இருவரில் ஒருவர் தன் எஜமானுக்கு மது புகட்டுவார். மற்றொருவர் சிலுவையில் அறையப்பட்டு, அவரது தலையைப் பறவைகள் தின்னும். நீங்கள் எதைப் பற்றி விளக்கம் கேட்டீர்களோ அந்தக் காரியம் தீர்மானிக்கப்பட்டு விட்டது” (என்றும் கூறினார்.)
அவ்விருவரில் யார் விடுதலையடைவார் என எண்ணினாரோ அவரிடம் “உன் எஜமானிடம் என்னைப் பற்றிச் சொல்வாயாக!” என்று (யூஸுஃப்) கூறினார். ஆனால் தன் எஜமானிடம் சொல்வதை விட்டும் அவரை ஷைத்தான் மறக்கச் செய்தான். எனவே சில ஆண்டுகள் அவர் சிறையிலேயே தங்கியிருந்தார்.
ஏழு மெலிந்த மாடுகள், ஏழு கொழுத்த மாடுகளைத் தின்பதாகவும், பசுமையான ஏழு கதிர்களையும், காய்ந்துபோன வேறு கதிர்களையும் நான் (கனவில்) கண்டேன். சபையோரே! நீங்கள் கனவுக்கு விளக்கம் கூறக்கூடியவர்களாக இருந்தால் என் கனவுக்கு விளக்கம் சொல்லுங்கள்!” என்று மன்னர் கூறினார்.
என்பதை படித்து விளக்கம் வழங்கி உரையாற்றினார்கள்.
சகோதரர்கள் கலந்து பயண்பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்

No comments:
Post a Comment