தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம்
உடுமலை நகர கிளை சார்பாக
01/02/26 அன்று மக்ரிப் தொழுகைக்குப் பின்பு
கிளைத் தலைவர் அப்துர் ரஹ்மான் தலைமையில் பொது மஷூரா நடைபெற்றது.
📌 இதில் துணை செயலாளர் சகோதரர். முஹம்மது ஜுபைர் அவர்கள் கடந்த ஜனவரி மாத தாவா செயல்பாடுகளை மக்களுக்கு பட்டியலிட்டு சொன்னார்கள்.
📌 துணை செயலாளர் அஸ்லம் அவர்கள் மதரசா ஆண்டு விழா சம்பந்தமான தகவல்களை எடுத்துரைத்தார்கள்.
📌 நகர துணைத் தலைவர் சகோதரர் பஜ்லுல்லாஹ் அவர்கள் ரமலான் தாவா பணிகள் பற்றியும்,
கஞ்சி காய்ச்சி
நோன்பாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு விநியோகம் செய்வது, இப்தார் ஏற்பாடுகள் பற்றியும் பட்டியலிட்டு வழக்கம் போல உறுப்பினர்கள் ஒத்துழைக்க கேட்டுக் கொண்டார்.
📌 மருத்துவ அணி செயலாளர் நயீமுல்லாஹ் அவர்கள் பள்ளி மராமத்து பணிகள் மற்றும் செலவு விபரங்களை தெரிவித்து ஆலோசனைகளை கேட்டறிந்தார்கள்.
📌 நகர பொருளாளர் சகோதரர் ஆஷிக் அவர்கள் வரவு செலவு மற்றும் செலவினங்கள் விபரங்களை மக்களிடத்தில் பட்டியலிட்டார்கள்.
📌 மாவட்டத் துணை தலைவர் சகோதரர் அப்துல் ரஷீத் அவர்கள் கூடுதல் ஆலோசனைகள் வழங்கி
நிகழ்ச்சி இனிதே முடிந்தது.
அல்ஹம்துலில்லாஹ்!

No comments:
Post a Comment